90 வயதுடைய முதியவர் ஒருவர் சுமார் 75 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இங்கிலாந்து தென்மேற்கு பகுதியில் உள்ள குளோசெஸ்டர் நகரில் பிரையன் வெப் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கார் உற்பத்தி செய்யும் Vauxhall நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். கடந்த 1946-ஆம் ஆண்டு பிரையன் வெப் அந்த நிறுவனத்திற்கு சென்று ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டு முதலில் தொழில் பழகுநராக வேலையில் சேர்ந்தார்.
அதன்பின் பிரையன் வெப் படிப்படியாக பதவி உயர்வு பெற்று கடந்த 34 வருடங்களாக அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனைத்தொடர்ந்து பிரையன் வெப்புக்கு பணி ஓய்வு காலம் வரும் பொழுதும்கூட இன்னும் 2 ஆண்டுகள் பணி செய்கிறேன் என்று கூறி பின்பு 25 ஆண்டுகள் மீண்டும் வேலை செய்தார். இதுபோன்று சுமார் 75 வருட காலம் தொடர்ச்சியாக ஒரே நிறுவனத்தில் பிரையன் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இதுகுறித்து பிரையன் வெப் கூறியபோது “முதலில் இந்த வேலை எனக்கு கடினமாக இருந்தது. ஆனால் அதன்பிறகு வேலை நாளுக்கு நாள் பழகி எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இவ்வாறு நிறுவனத்தில் நான் வேலை செய்தபோது இளமையாக உணர்வேன். ஆகவே தற்போது காலம் மாறி வருவதால் எனது வேலைக்கு ஓய்வு கொடுத்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.