இலங்கை கிரிக்கெட் அணியின் இடக்கை பழக்கமுள்ள, வீரரான திசாரா பெரேரா ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் ,அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் .
இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கான போட்டி தொடரில், இலங்கை ஆர்மி- ப்ளூம்பீல்டு என்ற 2 அணிகளுக்கிடையே குரூப் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ஆர்மி அணியின் கேப்டனாக திசாரா பெரேரா விளங்கினார். இவர் இறுதிக்கட்டத்தில் 20 பந்துகள் இருந்த நிலையில் 5 வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.அப்போது பந்துவீச்சாளரான தில்ஹான் கூரே ,அந்த ஓவரில் பந்துவீசினார்.
அவர் வீசிய 6 பந்துகளிலும் திசாரா பெரேரா 6 சிக்சர்களை அடித்து விளாசினார். அதோடு அவர் 13 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார். எனவே 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து விளாசிய முதல் இலங்கை வீரர் என்று சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாது சர்வதேச பட்டியலில் 9வது இடத்தை பெற்றுள்ளார்.இந்த பட்டியலில் ரவி சாஸ்திரி, கிப்ஸ்,கார்பீல்டு சோபர்ஸ், யுவராஜ் சிங், ஹஸ்ரத்துல்லா ஜஜாய்,ரோஸ் ஒயிட்லி ,லியோ கார்ட்ர், பொல்லார்டு ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் .