ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
சுவிட்சர்லாந்தில் ஒரே பாலின ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படலாம் என்றும் அவர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் எனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக அமைப்பின் படி இந்த விவகாரத்திற்கு பொது வாக்கெடுப்பின் மூலமே முடிவு காண வேண்டும் என்று Swiss People’s Partyயைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இதனால் இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. மேலும் கருத்துக் கணிப்பின் படி சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் 63% பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த திருத்த சட்டத்தின் மூலம் ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் குழந்தையையும் தத்தெடுத்து வளர்க்கலாம். குறிப்பாக திருமணமான லெஸ்பியன் ஜோடிகளும் விந்து தானம் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இந்த சட்டமானது வெளிநாட்டுவாழ் துணைவர்களுக்கு குடியுரிமை பெறுவதை எளிமையாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.