பாகிஸ்தான் பவுலர் பந்து வீசிய வேகத்தில் ,பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜிம்பாப்பே வீரரின் ஹெல்மெட் இரண்டாக உடைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது.
ஜிம்பாப்பே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான்-ஜிம்பாப்பே அணிகள் 1-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ளன. நேற்று முன்தினம் 2வது டி20 போட்டியின்போது ,அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் பாகிஸ்தானின் பவுலரான அர்ஷத் இக்பால், ஜிம்பாப்பே அணியில் பேட்டிங்கில் களமிறங்கிய கமுகுகான்வேவை நோக்கி பந்து வந்து வீசியுள்ளார்.அவர் வீசிய பந்து அதிவேகமாக கமுகுகான்வே தலையில் உள்ள , ஹெல்மெட்டின் மேல் பலமாக விழுந்தது. எனவே பந்து பட்ட வேகத்தில் ,ஹெல்மெட் இரண்டாக உடைந்தது. இதுவரை கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது இல்லை என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி உள்ளது .
Those dreadlocks surely saved Kamunhukamwe from potential concussion after getting hit by an Arshad Iqbal bouncer 😂 #ZIMvPAK @ZimCricketv #VisitZimbabwe pic.twitter.com/3n6oxjVn8K
— Kuda Jr (@kudaville) April 23, 2021