Categories
உலக செய்திகள்

“ஒரே பூச்சியா இருக்கு”…. எங்களுக்கு இனிமேல் வேண்டாம்…. கடிதம் மூலம் பதில் அளித்த இந்தியா….!!!!

ஈரானில் இருந்து கிவி பழங்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்த கிவி பழங்களில் பூச்சிகள் அதிகமாக இருந்ததால் இறக்குமதியை இந்தியா நிறுத்திக்கொண்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பலமுறை பழங்களில் பூச்சிகள் இருப்பது குறித்து எச்சரித்தும் இது தொடர்கதையாக இருந்ததால் இறக்குமதி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தடையை மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய பாதுகாப்பு அமைப்பு (NPPO) அமல்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் NPPO, கிவி பழங்களுக்கு டிச 8-ம் தேதியில் இருந்து அளித்த பிஸியோ சானிட்டரி சான்றிதழில் எங்கள் தரப்புக்கு உடன்பாடில்லை என்று கூறி அந்நாட்டு வேளாண் அமைச்சகத்திற்கு கடிதம் மூலமாக இந்தியா இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் முதல் ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியான கிவி பழங்களில்  ‘Aspidiotus netil’ மற்றும் ‘Pseudococcu Calceolariae’ என்ற பூச்சிகள் இருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. இதேபோன்று கடந்த 2019-ம் ஆண்டும் ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்த கிவி பழங்களில் பூச்சிகள் இருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து 4,000 டன் இந்த பழங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. மேலும் இந்த பழங்களின் உள்நாட்டு உற்பத்தி 13000 டன்னாக இருக்கிறது எனவும் அரசு தரவுகள் கூறுகிறது.

Categories

Tech |