Categories
உலக செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள் 3 பேர் அமெரிக்காவில் பலி..!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள் 3 பேர் அமெரிக்காவில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியான கிழக்கு புருன்ஸ்விகில் இந்தியர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நிஷா (33) என்பவர், அவரது மகள் (8) மற்றும் அவரது மாமனார் பரத் பட்டேல் (62) ஆகிய மூவரும் அவர்களின் வீட்டின் பின்புறத்திலிருந்த நீச்சல் குளத்தில் இறந்து சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் வீட்டிலிருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டதால் அவர்களின் பக்கத்து வீட்டினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குளத்தில் மூழ்கி இருந்தவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். அவர்கள் உயிரிழந்ததால் அது பயன் தரவில்லை. மேலும் அவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இங்கு குடிபெயர்ந்து வந்ததாகவும், அவர்களின் இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |