Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்’…. நெருங்கிய நண்பருடன் ரஜினிகாந்த்…. வைரலாகும் போட்டோ ஷுட்….!!!

நெருங்கிய நண்பருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக ஐதராபாத்தில் அவர் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதனை முடித்து சென்னை திரும்பியுள்ளார். தற்போது இப்படத்திற்கான அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் தங்கியிருந்த போது அங்கு அவரது நெருங்கிய நண்பரும், பிரபல தெலுங்கு நடிகருமான மோகன்பாபுவுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோ ஷூட்டை மோகன்பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மஞ்சு எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து “ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |