தமிழகத்தில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் துணை தேர்வுகள் நடைபெற்றது.
இந்த தேர்வினை எழுதிய மாணவர்கள் தங்களுடைய அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில் வருகிற 31-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.