தமிழகத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்காக அவரின் ரசிகர்கள் தீவிரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வலிமை என்ற பெயரில் தமிழக சட்டசபையில் ஆலோசனை நடைபெற்றது. தமிழக மானிய கோரிக்கையின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை பற்றி ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய அவர்,” விருதுநகரில் ரூ.400 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஆடை பூங்கா உருவாக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூரில் 500 ஏக்கர் பரப்பில் ரூ.5.90 கோடியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி சூளகிரி சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.300 கோடியில் நகர் திறன் பூங்கா விரைவில் உருவாக்கப்படும். அதுமட்டுமில்லாமல் திருவள்ளூர் மாவட்டம் செங்காத்த குளத்தில் ரூ.250 கோடியில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா தொடங்கப்படும். இதனிடையே வலிமை என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அரசு சிமெண்ட் வணிகப் பெயருடன் வலிமை என்ற புதிய வணிக பெயர் கொண்ட சிமெண்ட் இந்த ஆண்டு வெளிச்சந்தையில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் வலிமை என்ற சிமெண்டின் அப்டேட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்னும் ஒரு சில வாரங்களில் வலிமை என்னும் பெயரில் புதிய சிமெண்ட் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.