Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒற்றை தலைவலி வருவதற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள்..!!

ஒற்றை தலை வலியின் அறிகுறிகள்:

உடல் உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும், தலைவலி, குமட்டல் போன்ற  பிரச்சனைகள் உருவாகும்.

ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக இந்த ஒற்றை தலைவலி பாதிக்கும்.

இந்த நோய் கண் புலத்தில்  முதலில் மாற்றம் தெரியும், கால் மூட்டுகள் மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசியால் குத்துவது போல் உணர்வு  ஏற்படும்.

உடல் சமநிலை குழம்புதல் மற்றும் பேச்சில் தடுமாற்றம் ஏற்படும்.
உணவின் மணம் நுகர முடியாமல் போகும், போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள்  உருவாகும்.

 ஒற்றை தலைவலி ஏற்பட காரணம்:

மன அழுத்தம், கோபம், பதற்றம் மற்றும் அதிர்ச்சி போன்ற மனம்  சம்பந்தமாக ஒற்றை தலைவலி ஏற்படுகிறது, களைப்பு, தூக்கமின்மை, அதிக நேர பயணம், மாதவிடாய் நிறுத்தம் போன்ற உடலில் ஏற்படும் பிரச்னைகளிலாலும் ஒற்றை தலைவலி  ஏற்படும்.

உணவின் அளவை அதிகம் கட்டுப்படுத்துவது, சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, உடலில் நீர் அளவு குறைவாக இருப்பது, மது அருந்துவது, காபி, டீ, சாக்லேட் மற்றும் பால் கட்டி போன்ற உணவை நாம் சாப்பிடுவதால் ஒற்றை தலைவலி  ஏற்படுகிறது.

பிரகாசமான ஒளி, புகைத்தல், அதிக சத்தம், காலநிலை மாற்றங்கள், தூய காற்றின்மை மற்றும் மருந்துகள் போன்ற காரணமாக ஒற்றை தலைவலி  ஏற்படும்.

Categories

Tech |