அருப்புக்கோட்டையில் பத்து ரூபாய்க்கு ஒரு பிரியாணி என்ற விளம்பரத்தைப் பார்த்த உடன் தனிமனித இடைவெளியின்றி புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தின் முன் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி என்ற விளம்பரத்தை செய்தது. ஒரு நாள் மட்டும் இச்சலுகை எனவும் விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் விளம்பரத்தை பார்த்த உடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தனிமனித இடைவெளி இன்றியும், முக கவசம் அணியாமலும் வரிசையில் நின்று பிரியாணி பார்சல்களை வாங்கிச் சென்றேன். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கூட்டம் கூட்டமாக நின்ற பொதுமக்கள் அனைவரையும் விரட்டியடித்தனர். பின்னர் அந்த தனியார் உணவகத்தையும் மூட வைத்தனர்.