Categories
தேசிய செய்திகள்

சூப்பர்.. மாதந்தோறும் 100 குழந்தைகளுக்கு…. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையிலுள்ள ஏழுமலையான் கோவிலை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இது கோவில் பராமரிப்பு பணிகள் மட்டும் இன்றி பொது மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனை ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவச சிகிச்சை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அதிநவீன குழந்தைகள் கேத் ஆய்வகத்தை தேவஸ்தான தலைவரான ஒய்.வி.சுப்பா ரெட்டி திறந்து வைத்தார். இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் தாய்மார்களை சந்தித்து நம்பிக்கை கொடுத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் ஒய்.வி.சுப்பா ரெட்டி பேசியதாவது “முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி வழிகாட்டுதல்களை நினைவு கூறினார். அண்மையில்தான் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனையானது திருப்பதியில் திறக்கப்பட்டது. இதன் மூலமாக ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இதய அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குறைந்தது 100 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகளுக்கு தேவஸ்தானம் உறுதியாக நிற்கும். இந்த மருத்துவமனையில் தற்போது வரை 16 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக 100 நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர். ஆகவே மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். எனவே விரைவில் முழுமையான அளவில் செயல்படும் சிறந்த மருத்துவமனையாக ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனை மாறும்” என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர் திருமலைக்கு செல்லும் 2-வது மலைப்பாதையை ஆய்வு செய்தேன். இந்த மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வைகுண்ட ஏகாதசி தயாராக இருக்கும்” அவர் என்று உறுதியளித்தார்.

Categories

Tech |