பின்லாந்தில் 16 வயது சிறுமி ஒரு நாள் ஜனாதிபதியாக இருந்த சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
ஐரோப்பிய நாடான பின்லாந்தில் கடந்த புதன்கிழமை ஒரு நாள் மட்டும் 16 வயதேயான சிறுமி நெல்லா சால்மினென் (Nella Salminen) ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். இது உலகிலுள்ள இளம்பெண்களை ஒருநாள் அரசு அல்லது வியாபாரத்தில் தலைமை பொறுப்பை ஏற்கும் பிரச்சாரத்தின் #GirlsTakeoverஇன் ஒரு பகுதியாக பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக செய்ததாகும்.
16-yo Nella Salminen worked alongside President of Finland @niinisto as part of the #GirlsTakeover organized by Plan International. This year the campaign highlights impact of information on #GenderEquality.
🔗https://t.co/wruOR9F6KE
📸Jon Norppa/@TPKanslia #DayofTheGirl #IDG2021 pic.twitter.com/215F94oc6W— Finland's Mission to the UN 🇫🇮🇺🇳 (@FinlandUN) October 6, 2021
இதேபோல் அக்டோபர் 11 ம் தேதி ஐ.நா மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு உகாண்டாவின் கல்வி அமைச்சர், சுவிஸ் மத்திய ஆலோசகர் மற்றும் பல முக்கிய இந்தோனேசிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இளம்பெண்களுடன் தங்களது பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும் பின்லாந்து அரசாங்கத்திற்கு பிரதமர் சன்னா மரின் தலைமை தாங்குகிறார். இந்நிலையில் இவர் 2019 ஆம் ஆண்டு தன்னுடைய 34வது வயதில் ஆட்சிக்கு வந்த போது உலகின் மிக இளையவர் என்ற பெருமையாக போற்ற பெற்றார்.