Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் ரிலீஸா…. அடுத்து வரும் காலங்களில் கடும் போட்டி….!!!

ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் ரிலீஸ். 

தீபாவளிக்கு பின் எப்போதுமே படங்கள் வெளியிட்டில் ஒரு தேக்கம் ஏற்படும். குறிப்பாக மழைக்காலம் என்பதால் அதிகமான படங்கள் வெளியாகாது. அதற்குப் பிறகு கிறிஸ்துமஸ் விடுமுறைகள்தான் திரைப்படங்களை வெளியிட பலரும் முன் வருவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் திரைப்படங்களின் வெளியீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. கிடைக்கும் இடைவெளியில் தங்களது படங்களை வெளியிட்டு விட தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றார்கள்.

கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு “சர்தார் மற்றும்  பிரின்ஸ்”  ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. அதற்கு முன் வெளியாகிய “பொன்னியின் செல்வன் மற்றும் காந்தாரா” திரைப்படங்கள் குறிப்பிட்ட அளவில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. தீபாவளி வெளியீடுகள் வெளிவந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்று “காலங்களில் அவள் வசந்தம்” என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் அடுத்த வாரம் நவம்பர் 4-ஆம் தேதி “லவ் டுடே”,  “காபி வித் காதல்” மற்றும் “நித்தம் ஒரு வானம்” ஆகிய மீடியம் பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவற்றில் “லவ் டுடே”,  “காபி வித் காதல்” திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகின்றது. தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் தீபாவளி படங்கள் தீபாவளிக்கு முன்பு வெளிவந்த படங்கள் நவம்பர் 3 வரை தாக்கு பிடிக்க முடியும்.  எனவே நவம்பர் 4 அன்று வெளியாகும் படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சில படங்கள் அன்றைய போட்டிகள் சேரவும் வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |