Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஒரு நொடியும் இனி காத்திருக்க முடியாது” – மகிழ்ச்சியில் சின்ன தல…

ஐபிஎல் போட்டிகளில் களத்தில் இறங்கி விளையாடுவதற்கு இனி ஒரு நொடி கூட காத்திருக்க முடியாது என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற இருந்த ஐபிஎல் தொடர்கொரோனாவின் காரணமாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஐக்கிய அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்சமயம் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளுக்கான அட்டவணைகள் போன்றவற்றை ஐபிஎல் போட்டிகளை நிர்வாகிக்கும் குழு கலந்தாய்வின் மூலம் நிர்ணயிக்க உள்ளது.

 

 

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்ன தல’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” களத்தில் இறங்கி விளையாடுவதற்கு இனி ஒரு நொடி கூட காத்திருக்க முடியாது. சென்னை அணியுடன் ஐபிஎல் தொடரை விளையாட ஆர்வத்தோடு எதிர்பார்த்திருக்கிறேன். அமீரகம் சென்று விளையாடுவதை மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று ஐபிஎல் போட்டிகள் நடத்துவது உறுதியாகி இருக்கும் சூழ்நிலையில் மிகுந்த உற்சாகத்துடன் சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக 2 பார்மெட்டிலும் சதம் அடித்தவர் சுரேஷ் ரெய்னா.

Categories

Tech |