மோனலிசா ஓவியம் ஒன்று இணையத்தில் சுமார் 25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது .
பிரான்சில் பாரிஸ் நகரை சேர்ந்த ரேமண்ட் ஹெக்கிங் என்பவர் கடந்த 1953 ஆம் ஆண்டு ஒரு கடையிலிருந்து மோனாலிசா ஓவியம் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த ஓவியம் காண்பதற்கு லியோனார்டோ டாவின்ஸி வரைந்த ஓவியம் போல இருந்ததால் இதை உண்மை என நினைத்து வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த ஓவியத்தை இணையத்தில் ஏலம் விட்டுள்ளார்.ஆனால் அந்த ஓவியம் எதிர்பார்க்காத வகையில் சுமார் 3.4 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 25 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் இந்த படம் போலி கேன்வாஸில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.