தாய்லாந்து நாட்டில் ஆன்லைனில் ஆர்டர் செய்து ஐ-போன் வாங்கிய இளைஞருக்கு நேர்ந்த ஏமாற்றம் வலைத்தளங்களில்வைரலாகும் வீடியோ .
தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக அனைவரும் பொருட்களை வாங்கி கொள்கிறார்கள்.ஒரு சின்னபொருள்என்றாலும் அதனை கடைக்குச் சென்று வாங்காமல் ஆன்லைன் மூலமாகவே ஆர்டர் செய்து வீட்டுக்கு வந்து சேரும்படி வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் அவ்வாறு ஆர்டர் செய்யும் பொருள் சிலருக்கு சரியாக வந்து சேரும். பலருக்கு ஏமாற்றைத்தை தரும்.அதனால் ஏமாற்றம் அடைந்தவர்கள் பலரும் உள்ளனர்.இதுபோன்ற ஒரு சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது.தாய்லாந்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்து உள்ளது.
அதனால் அந்த இளைஞர் ஆன்லைன் மூலமாக மிக மலிவான விலையில் ஐபோன் தேடியுள்ளார். அப்போது விளம்பரத்தை ஒன்று பார்த்து அதன் மூலமாக ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். அதன்பிறகு தான் ஆர்டர் செய்த ஐபோன் விரைவில் வந்துவிடும் என்று இளைஞர் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார் அப்போது அவர்ஆர்டர் செய்த பொருள் அவரது உயரத்தில் ஒரு பார்சல் மூலமாக வந்துள்ளது.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அந்த பார்சலை பிரித்து பார்த்தார்.அதில்ஒரு டேபிள் இருந்தது.மேலும் டேபிள் ஐபோன் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.அதனால் மனமுடைந்த அவர் தன் தவறை உணர்ந்து சமூக வலைத்தளத்தில் ஐபோன் டேபிள் புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார். மேலும் அவர் ஐபோன் விலை மலிவானது என்பதை பார்த்து நான் ஏமாந்து விட்டதாகவும் என்னை போல யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.