Categories
உலக செய்திகள்

“ஒரு வழியா ஜப்பானுக்கு வந்தாச்சு “…! அழிந்து வரும் இனம் ….அதிரடி முடிவு எடுத்த பிரபல நிறுவனம் ….!!!

தைவான் உயிரியல் பூங்காவில் உள்ள எம்மா என்ற வெள்ளைக் காண்டாமிருகம் ஒன்று ஜப்பான் உயிரியல் பூங்காவிற்கு இனப்பெருக்கத்திற்காக அனுப்படுகிறது .

ஆசியாவில் பிடித்து வளர்க்கப்படும் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் , தற்போது அதனை அதிகரிக்க வேர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபார் நேச்சர் நிறுவனம் தைவான்  நாட்டில் உள்ள எம்மா என்ற காண்டாமிருகத்தை இனப்பெருக்கத்திற்காக ஜப்பானுக்கு அனுப்புகிறது. இந்த வகையான  வெள்ளை காண்டாமிருகங்கள் காட்டில் சுமார் 18 ஆயிரம்தான் மீதம் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது.  இதன் காரணமாக எம்மா என்ற 5 வயது பெண் காண்டாமிருகம் ,ஜப்பானில் டொபு உயிரியல் பூங்காவில் உள்ள மொரான் என்ற 10 வயது ஆண் காண்டாமிருகத்துடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது .

அதோடு மனிதர்கள் காண்டாமிருகங்களை வேட்டையாடுகின்றனர். இந்த காண்டாமிருகங்கள்  புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆண்மை பெருக்கத்திற்கு பயன்படுவதாக கூறி, அவற்றின் கொம்புகள்  வெளியில் கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது . இந்நிலையில் காண்டாமிருகத்தின் கொம்புகள் புற்றுநோய் சிகிச்சை, ஆண்மை பெருக்கம் போன்ற சிகிச்சைக்குப் பலன் தரும் என்று எந்த ஒரு அறிவியல் ரீதியாகவும் நிருபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |