Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக விநியோகம் செய்யல…. பொதுமக்களின் சாலை மறியல்…. சேலத்தில் பரபரப்பு….!!

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை அருகே பாப்பாபட்டி 14-வது வார்டு பகுதியில் பெரும்பாலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு வார காலமாக போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கவேண்டி இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் பாப்பாபட்டி அருகே ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் அவர்களிடம் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |