Categories
உலக செய்திகள்

ஒரு வாரத்தில் 4 திருமணம் 3 விவாகரத்து…. வங்கி ஊழியரின் தந்திரம்…. என்ன நடந்தது நீங்களே பாருங்க….!!!

வங்கியில் விடுமுறை பெறுவதற்காக தொடர்ந்து  திருமணம் செய்து கொண்டே இருந்த வங்கி ஊழியரின் தந்திர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டைச் சேர்ந்த வங்கி  ஊழியர் ஒருவர் ஏப்ரல் 6-ஆம் தேதி அவரின் திருமணத்திற்காக 8 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார். திருமணமாகி திருமண விடுமுறை நாட்கள் முடிவதற்கு முன்பே அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இப்போது மீண்டும் அந்த பெண்ணையே திருமணம் செய்வதற்காக வங்கியில் விடுப்பு கேட்டுள்ளார்.

அந்த வங்கி ஊழியர் திரும்பத் திரும்ப ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து  3 முறை விவாகரத்தும் செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு 32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் கொடுத்துள்ளார்கள்.ஆகையால் அவர் விடுப்பு  எடுப்பதற்காக இந்த மாதிரி செய்திருப்பாரோ என்று பலர் சந்தேகம் அடைந்து வருகிறார்கள்.

இதுகுறித்து உண்மையை தெரிந்து கொண்ட வங்கி உரிமையாளர் அவருக்கு தற்போது அளிக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்துள்ளது. இதனை அறிந்த வங்கி ஊழியர் மிகுந்த கோபம் கொண்டு இது பற்றி  அந்நாட்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது போன்ற நிகழ்வு எங்கும் நடக்காத நிலையில் இதனை மக்கள் வினோதமாக நினைத்து வருகின்றனர்.

Categories

Tech |