உலகத்திலேயே இதுவரை கொரோனா வைரஸ் பரவாதிருந்த தீவு நகரமான லட்சத்தீவில் தற்போது ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்தியாவின் தீவு நகரமான லட்சத்தீவில் மட்டும் பரவாமல் இருந்தது ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், கடந்த 1 ஆண்டுகளாக லட்சத்தீவில் வராது இருந்த கொரோனா வைரஸ் தற்போது ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவர் கடந்த 3ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு வந்துள்ளார்.
அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் தனிமைப்படுத்தபட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று லட்சத்தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் லட்சத்தீவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கொச்சியில் இருந்து வரும் அனைவரும் தனிமைப்படுத்தியபின்பு தான் வெளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று லட்சத்தீவு நிர்வாகம் அறிவித்துள்ளது.