Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் கேப்டன்சி பதவிலிருந்து கோலி நீக்கமா ….? தென் ஆப்பிரிக்க சுற்று பயணத்துக்கு புதிய கேப்டன் …. வெளியான தகவல் …..!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் முதல் டெஸ்டிலும் அவர் பங்கேற்கமாட்டார் .

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி கடந்த இரண்டு  வருடங்களுக்கு மேலாக சதம் அடிக்க முடியாமல் உள்ளார் . கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் சதமடித்தார் .மேலும் இந்திய அணியில் மூன்று விதமான தொடருக்கும் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரது பேட்டிங் திறமை பாதிக்கப்படுவதாக கருத்து நிலவியது .இதனால் சமீபத்தில் டி20 தொடர் கேப்டன்சிலிருந்து இருந்து விலகினார் .இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் இந்திய அணியின் ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவிலிருந்து  விராட் கோலி நீக்கப்பட உள்ளார் .தென்னாபிரிக்கா சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியின் ஒருநாள் தொடரில் புதிய கேப்டன்நியமிக்கப்படுகிறார்.

இதனால் இந்த ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார். இந்திய அணி வருகின்ற டிசம்பர் மாதம் முதல் ஜனவரி வரை தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் டெஸ்ட் தொடர் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதியும், ஒருநாள் தொடர் ஜனவரி 11ஆம் தேதியும், டி20தொடர் ஜனவரி 19ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது தான் ஒருநாள் கேப்டன்சிலிருந்து  விராட் கோலி நீக்கப்பட உள்ளார் .மேலும்  ஒருநாள் தொடருக்கான கேப்டன்  பதவி குறித்து விராட் கோலியிடம் பிசிசிஐ விரைவில் ஆலோசனை நடத்த உள்ளது. இதன் பிறகு ஒருநாள் தொடருக்கான அணியில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |