ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் டாப் 5 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கிடையேயான 3 ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்டலில் நடந்த முதல் நாள் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் மிதாலி ராஜ் அதிரடி காட்டினார்.
அவர் 108 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 72 ரன்களை எடுத்திருந்தார். இதன் மூலம் இங்கிலாந்தில் 50 ரன்களுக்கு மேல் 13வது முறையாக எடுத்துள்ளார் . இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 22 ஆண்டுகளாக விளையாடியுள்ள மிதாலிராஜ் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் டாப் 5 இடத்திற்கு நுழைந்துள்ளார் .கடந்த 2019 – ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் அவர் டாப் 5 இடத்தை பிடித்துள்ளார்.