Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஒருசில போட்டியை வைத்து இப்படி சொல்லாதீங்க”….. ரவீந்திர ஜடேஜா கருத்து …..!!!

ஒருசில போட்டிகளை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் என  ஜடேஜா தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது தொடக்க 2 ஆட்டங்களிலும் படுமோசமாக தோல்வியடைந்தது .இதையடுத்து  ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதோடு ரன் ரேட்டிலும் முன்னேறியது .இதனிடையே  இன்று நடக்கும் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுதான்  இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவரும் . ஆனால் இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறும்.

அதோடு நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குள் முன்னேற முடியாது .இதனிடையே இந்திய அணியின் செயல்பாடு குறித்து அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது,              ” ஒரு சில மோசமான ஆட்டத்தை வைத்து இந்திய அணியை தவறாக கணக்கிட வேண்டாம். கடந்த 3 வருடங்களாக உள்நாட்டிலும் ,வெளிநாட்டிலும் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது .தற்போது ஒரு சில போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது .இதனால் இதுபோன்ற போட்டியை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் .இது நியாயமில்லை, இதற்கான பயணம் மிகவும் பெரியது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |