சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து , தோல்வியை சந்தித்து வந்த ஆர்சிபி அணி நேற்று வெற்றி பெற்றுள்ளது.
2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டி நேற்று ,சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது . இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர். இந்த ஐபிஎல் தொடர் போட்டிகள் ஆறு மைதானங்களில் , மட்டுமே நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் முன்பே தெரிவித்துள்ளது. அதோடு எந்த ஆணியும் அவர்களுடைய உள்ளூர் மைதானத்தில், போட்டி நடக்காதவாறு அட்டவணையை தயாரித்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் ,அவர்களுடைய உள்ளூர் மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படாது.
இதன்படி ஆர்சிபி அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், முதல் மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுடன் போட்டியிட வேண்டும். ஆர்சிபி அணிக்கு ,சிஎஸ்கே அணி என்றாலே வேப்பங்காய் போல கசக்குமாம். ஏனெனில் இதற்கு முன் சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளில், விளையாடிய ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே, வெற்றி பெற்றிருந்தது. இதனால் மூன்று போட்டிகளில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுவதால் ,ஆர்சிபி வீரர்கள் பீதியடைந்து காணப்பட்டனர் .
ஆனால் அந்த நிலை நேற்று மாறியுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எதிராக விளையாடிய ஆர்சிபி அணி பரபரப்பான இறுதிகட்டத்தில் வெற்றி பெற்றது. இறுதியாக 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த ஆர்சிபி அணி நேற்று வெற்றி பெற்றது . ஆர்சிபி அணி வருகின்ற 14ஆம் தேதி சன்ரைசஸ் உடனும் ,18ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடனும் போட்டியிட உள்ளது.