ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் 27-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய கௌரவமாகவும், திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த விருதுகளை வழங்கும் விழாவானது ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் மிக பிரமாண்டமாக நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடம் இரண்டு மாதங்கள் தாமதமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 94-வது ஆஸ்கர் விருது விழா 2022-ஆம் ஆண்டு நடைபெறவிருப்பதால், அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 94-வது ஆஸ்கர் விருது விழா பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மாதம் தாமதமாக மார்ச் 27-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்கர் அகாடமி, இந்த விழா ஹாலிவுட்டின் தியேட்டரில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.