நீண்ட காலத்திற்குப் பின் மீண்டும் ஆஸ்கர் விருதுகள் வழங்க போவதால் டால்பி திரையரங்குகள் முழுவதும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலத்திற்கு பிறகு இன்று 94 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற திரையரங்கில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த விழா இந்திய நேரத்தின் படி நாளை மறுநாள் அதிகாலையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த விழா கோவிட் கட்டுப்பாட்டுடனும் சர்வதேச விருது என்பதால் டால்பி திரையரங்குகள் முழுவதும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டும் வண்ணமயமான அனைத்து ஏற்பாடுகளும் சரியான முறையில் நடத்தப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த விழாவில் பங்கேற்க வரும் போது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து ஹாலிவுட் ஆஸ்கார் விழாவை வண்ணமயமாக்க நட்சத்திரங்களுக்கு பிரமாண்ட ஆடை வடிவமைப்பாளர்கள் இரவு பகலாக கண்விழித்து உழைக்கின்றனர்