சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதானது, நடிகை ஜெசிகா சேஸ்டெய்ன்-க்கு கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 94-ஆம் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது வெகுவிமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், The Eyes of Tammy Faye என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது, ஜெசிகா சேஸ்டெய்ன் என்ற ஹாலிவுட் நடிகைக்கு கிடைத்திருக்கிறது.
பெல்ஃபாஸ்ட் திரைப்படத்திற்கு, சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது, கென்னித் பிரனாக்குக்கு கிடைத்திருக்கிறது. தி பவர் ஆப் தி டாக் படத்திற்காக, ஜேன் கேம்பியன், சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை பெற்றிருக்கிறார்.
கோடா என்ற திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இத்திரைப்படத்தின் இயக்குனர் ஷியான் ஹெட்டர். லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது, தி லாங் குட்பை படத்திற்கு கிடைத்திருக்கிறது. ஜென்னி பெவனுக்கு, க்ரூல்லா படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.