அமெரிக்காவில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளரை அடித்த வில் ஸ்மித்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் டியூஷன் திரைப்படம் ஆறு விருதுகளை பெற்றுள்ளது. மேலும் சிறந்த கதாநாயகனுக்கான விருது வில் ஸ்மித்திற்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவியான ஜேடா பிங்கட் ஸ்மித்தை பார்த்து அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிரிஸ் ராக் ஜிஐ ஜேன் 2 போல் இருக்கிறார் என்று நக்கல் செய்து பேசியுள்ளார். இதற்கு ஆத்திரமடைந்த வில் ஸ்மித் விரைந்து சென்று கிரிஸ் ராகை ஓங்கி அடுத்து அவரை எச்சரித்து உள்ளார்.
இதனை பார்த்த அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் நிஜமா அல்லது ஸ்க்ரிப்ட்டா என்று வியந்து பார்த்தனர். இதனை தொடர்ந்து பிரபல தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி வில் ஸ்மித்தின் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.