திடீரென உணரப்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓசியானியா கண்டத்தில் Vanuatu என்ற தீவு அமைந்துள்ளது. அந்தத் தீவில் திடிரென மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த பயங்காரமான நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இதேபோல் கடந்த 14 ஆம் தேதி ஹைட்டி தீவிலும் மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் 1941 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 8000க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.