ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டியில் சானியா- சூவாய் ஜாங் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் போட்டி செக்குடியரசில் நடைபெற்று வந்தது . இதில் நேற்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா- சீனாவின் சூவாய் ஜாங் ஜோடி , அமெரிக்காவின் கைட்லின் கிறிஸ்டியன் – எரின் ரோட்லைப் (நியூசிலாந்து) ஜோடியை எதிர்கொண்டது.
இதில் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சானியா ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற சானியா ஜோடிக்கு ரூபாய் 18 ½ லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது .அதோடு இந்த ஆண்டில் சானியா மிர்சா வென்ற முதல் படம் இதுவாகும்.