ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற சானியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் போட்டி செக்குடியரசில் நடைபெற்று வருகிறது .இதில் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா- சீன வீராங்கனை சூவாய் ஜாங் ஜோடி , ஜப்பானின் ஹோஜூமி-நினோமியா ஜோடியை எதிர்கொண்டது .
இதில் சானியா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சானியா ஜோடி, கைட்லின் கிறிஸ்டியன் -எரின் ரோட்லைப் ஜோடியுடன் மோதுகின்றது.