Categories
தேசிய செய்திகள்

வேற லெவல்… கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்று… மகளாக மாறிய மருமகள்… குவியும் பாராட்டு…!!!

கொரோனா பாதித்த மாமனாரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக மருமகள் தனது தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழச் செய்துள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கோரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை அழைத்துச்செல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அசாம் மாநிலம் பாட்டிகவானில் என்ற பகுதியில் வசித்து வருபவர் துலேஷ்வர் தாசு. இவரது மகன் சூரஜ். இவருக்கு திருமணமாகி மனைவி நிகாரிகாவை வீட்டில் விட்டு விட்டு வெளியூர் சென்று விட்டார். நிகாரிகா தான் மாமனாரை கவனித்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு துலேஷ்வர் தாசுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதியும் இல்லாததால் மாமனாரை மருத்துவமனைக்கு எப்படி அழைத்துச் செல்வது என அவர் திகைத்து வந்துள்ளார். உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணி மருமகள் மாமனாரை தன் தோளில் சுமந்து கிடைத்த வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார்.

பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாமனாரை தோளில் சுமந்து வந்ததால் மருமகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை ,மாமனாரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற தன்னலம் பாராமல் பொறுப்புடன் செயல்பட்ட மருமகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |