Categories
தேசிய செய்திகள்

அமுல்யா பட்நாயக்கிற்கு மாற்றாக வேறு காவல் ஆணையர்.!!

ஜனவரி 31ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக்கிற்கு மாற்றாக தேர்தல் பணிக்காக வேறு காவல் ஆணையரை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

டெல்லி மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரை தேர்தல் பணிக்காக நியமனம் செய்கிறது.

இந்த நிலையில், டெல்லி பெருநகர காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக் வரும் 31ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ளார். அதனால், அவரை தேர்தல் பணிக்காக நியமிக்காமல் வேறு ஆணையரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

Categories

Tech |