Categories
சினிமா தமிழ் சினிமா

ஒற்றுமை என்பதே இல்லை…. தமிழ் திரையுலகம் குறித்து அமைச்சர் கருத்து…!!

தமிழ் திரையுலகில் ஒற்றுமை இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார் .

தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். திரையுலகில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது ” திரையுலகினர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. நடிகர் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர்.

அதுபோலவே தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். தயாரிப்பாளர்கள் சங்கமாக இருந்தாலும், நடிகர்கள் சங்கமாக இருந்தாலும் ஒற்றுமை என்பது முக்கியம். இவர்கள் ஒற்றுமையாக இணைந்து பிரச்சினையை பேசி தீர்க்க தயாராக இருந்தால் அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். தேவையானால் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூக தீர்வு காண அரசு வழிவகை செய்யும்.” என கூறியுள்ளார்.

Categories

Tech |