ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் . அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தர்ராஜ் என்பவருடைய வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்தார் . அதில் அரசு மணல் குவாரி ஒப்பந்தம் உள்ளதை மறைத்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் . மேலும் , அவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றதாக கூறி அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணை நடைபெற்று நிலுவையில் இருந்து வருகின்றது .
இந்நிலையில் கட்சி தாவல் சட்டத்தில் மூலம் ஓட்டப்பிடாரம் வேட்பாளர் சுந்தர்ராஜ் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் நாடாளுமன்ற மாற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் நிலவையில் இருக்கும் வழக்கை காரணம் காட்டி ஒட்டப்பிடார சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை இந்நிலையில் கிருஷ்ணசாமி புதிதாக மனுதாக்கல் ஒன்றை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் தாம் தொடர்ந்த வழக்கின் காரணமாக தற்போது ஒட்டப்பிடாரத்தில் தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனவே தன்னுடைய வழக்கை வாபஸ் பெறுவதாக குறிப்பிட்டப்பட்டிருந்ததையடுத்து ஓட்டப்பிடாரம் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்து இது தொடர்பான அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டுமென்றும் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.