Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி…. டிரைவர் செய்த செயல்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாத்திமா நகர் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துரைராஜ் என்ற மகன் உள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தற்போது பொம்மிடியில் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைராஜ் ஓட்டி சென்ற லாரி விபத்துக்குள்ளானதால் ஒருவர் உயிரிழந்ததார். அதனால் துரைராஜ் மீது பல்லாவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைத்திருந்தனர். அப்போது அவரது ஓட்டுனர் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

இதனால் சென்னையில் இருந்து கடத்தூருக்கு துரைராஜ் வந்தார். இதனையடுத்து ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் துரைராஜ் மனமுடைந்தார். அதன்பின் மது வாங்கி குடித்து விட்டு கடத்தூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள 80 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தான் தற்கொலை செய்யப் போவதாக துரைராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பின் அவரது கூச்சல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கடத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துரைராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து துரைராஜ் கீழே இறங்கி வந்த பின் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தனது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ததால் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையினரிடம் துரைராஜ் தெரிவித்துள்ளார். அதன்பின் துரைராஜின் மனைவியை வரவழைத்து காவல்துறையினர் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |