சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பகுதியில் குறும்படம் தயாரிப்பாளரான அப்துல் மாஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் மாஜித் குறும்படம் எடுப்பதற்காக காரில் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது கார் என்ஜினில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனை அறிந்த அவர்கள் உடனே காரை நிறுத்தி பார்த்துள்ளனர்.
அப்போது என்ஜினில் இருந்து அதிகமாகப் புகை வந்த நிலையில் திடீரென மளமளவென தீ பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அப்துல் மாஜித் மற்றும் அவரின் நண்பர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. பின்னர் அவர்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். மேலும் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த மூன்று பேரும் உயிர் தப்பியுள்ளனர்.