Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒட்டுமொத்த நாடே திறந்திருக்கிறது …. விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தன் மீதான  விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் . 

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருந்தது .ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட மூன்று பயிற்சியாளர்களுக்கு  கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதில் கடுமையான பயோ பபுள்  வளையத்தை மீறி பயிற்சியாளர்களுக்கு தொற்று தாக்கியது எப்படி என விசாரிக்கும்போது ,அவர்கள் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா தான் காரணமாக இருந்தது என தெரியவந்தது. இதனால் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டது .

இந்நிலையில் விமர்சனத்துக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ,” ஒட்டுமொத்த நாடே (பிரிட்டன் ) திறந்திருக்கிறது . முதல் டெஸ்ட் போட்டியிலேயே  எதுவேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம் “என்று கூறினார் . மேலும் அவர்,” இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடியதன் மூலமாக சிறந்த கோடைக்கால கிரிக்கெட்டை பார்க்க முடிந்தது என்றும், இந்த கொரோனா தொற்று காலத்திலும் சிறந்த தொடராக அமைந்தது . இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர் .ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா தொற்று காலத்தில் இந்திய அணி செயல்பட்டது போன்று வேறு எந்த அணியும் செயல்பட்டிருக்காது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |