Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம தளபதி ஊசிய பார்த்தா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவாராம்”…. எஸ்ஏசி பகிர்ந்த சுவாரசிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை பேட்டியில் இருந்துள்ளார்.

அவர் கூறியதாவது, விஜய்க்கு சிறுவயதில் உடல் நலம் சரியில்லாமல் போகும்போது மருத்துவமனைக்கு ஊசி போடுவதற்காக அழைத்து சொல்வோம். ஆனால் விஜய் ஊசி போட மாட்டேன் என்று கூறி முரண்டு பிடித்து கதறி அழுவார். அவருக்கு ஊசி என்றால் மிகவும் பயம். அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவார் என்று கூறியுள்ளார். மேலும் எஸ்சிஎஸ்சி சொன்னது தற்போது வைரலாக வரும் நிலையில் தளபதி விஜய்க்கு ஒரு சிறிய ஊசி என்றால் பயமா என்று ரசிகர்கள் பலரும் ஜாலியாக கூறி வருகிறார்கள்.

Categories

Tech |