Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நம்ம சாப்பாட்டுல இது கடைசி தா… மருத்துவத்தில் இது தான் ஃபர்ஸ்ட்… டெய்லி கொஞ்சமாவது சாப்பிடுங்க..!!

காய்ச்சல் வருவது போன்ற உணர்வு,  வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ரசத்தை சாப்பிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள் என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.

நமக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வரும்போது மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் மிளகு பூண்டு வைத்த ரசத்தை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் ரசத்தில் நாம் சேர்க்கும் உணவுப் பொருட்கள் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த உணவு என்றால் அது ரசம் சாதம் தான்.

நாம் வைக்கும் ரசத்தில் என்னென்ன பொருள்களை நாம் செய்கிறோம் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். புளி, தக்காளி, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் வத்தல் பல பொருள்களை வைத்து நாம் ரசம் செய்கிறோம். இந்த ஒவ்வொரு பொருளும் மருத்துவ குணம் நிறைந்தது.

மருத்துவ பலன் 

மிளகு நம் ஊரில் விளையும் கருப்பு தங்கம் என்று கூறுவார்கள். மிளகு நம் உடம்பில் இருக்கும் விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.

வாய்வு தொல்லையை விரட்ட உதவுவது வெள்ளைப்பூண்டு. இதயத்திற்கு மிகவும் நல்லது.

சீரகம் நமக்கு செரிமானம் ஆகுவதற்கு மிகவும் உதவும் ஒரு பொருள். வயிறு வலி இருப்பவர்கள் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் அவ்வளவு நல்லது.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. அதுபோன்று எந்த குழம்பாக இருந்தாலும் தாளிப்பதற்கு முதலில் பயன்படுத்துவது கடுகு. கடுகில் நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளது. இதனால்தான் ஒவ்வொரு சமையலிலும் அதை சேர்த்துக் கொள்கிறோம்.

ரசம் வைப்பதற்கு முக்கிய பொருள் புளி. புளி நம் உடம்பில் உள்ள காயத்தை ஆற்றும் தன்மை கொண்டது. இதயத்திற்கு மிகவும் நல்லது.

அடுத்தது மிளகாய், மிளகாயில் வைட்டமின் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. புற்று நோயை குணப்படுத்துவதற்கு மிளகாய்வற்றல் மிகவும் உகந்தது.

வெயிலுக்கு இதமாக நமது உடலையும் தோலையும் காப்பது தக்காளி. ரசம் வைப்பதற்கு மிக முக்கியம் ஆகவும் பார்ப்பது இதுதான்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் ரசத்தை நாம் நுரை கட்டும்பொழுது இறக்கிவிட வேண்டும். அதை கொதிக்க வைத்தால் கடுத்துவிடும்.

Categories

Tech |