Categories
பல்சுவை

உவர்ப்பு சுவை நிறைந்ததே ஆனால் காப்பது நம் கடமை தான்…!!

அலைகள் எப்பொழுதும் அழகு. அதில் கால் நனைப்பது பேரானந்தம். எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத சூரிய உதயம். பிரமிக்க வைக்கும் கடல் பயணம். இப்படி மனித வாழ்க்கையின் பல்வேறு நிமிடங்களை கொண்டாட்டங்களாக மாற்றும் கடலை உலக கடல் தினம் என நாமும் என்று கொண்டாட கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் கடலை வாழ்த்துவதற்காக அல்ல நமது வாழ்க்கை முறையால் அழிந்துவரும் கடல் வளத்தை பாதுகாக்க.

பூமியின் நுரையீரலான கடல் மழைப் பொழிவுக்கும், உணவுக்கும், மருந்துக்கும் பொருட்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது என்று உலக நாடுகள் உணர்ந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் எட்டாம் தேதி உலக கடல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கடல் மாசடைவதற்கான 80 சதவீத காரணம் நிலங்களில் வாழும் மனிதர்கள் என்றும் வருடத்திற்கு 80 லட்சம் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால் என்றும் ஐநா உறுதி செய்துள்ளது.இதனால் வருடத்திற்கு ஒரு லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் உயிர் இழப்பதோடு மட்டுமல்லாமல் மீன்கள் பிளாஸ்டிக் பொருட்களை உண்பதாகவும் பிறகு மனிதர்கள் அந்த மீனை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் எச்சரிக்கின்றது.

பூமியில் மூன்று பங்காக இருக்கும் கடலை பாதுகாக்க மீதி ஒரு பங்கில் வாழும் மனிதர்களின் பங்கு அவசியமானது. அன்றாட வாழ்க்கையில் நாம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தால் தான் கடல் வளத்தை பாதுகாக்க முடியும். மேலும் எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச் செல்ல முடியும். உவர்ப்பாக இருந்தாலும் கடல் நீரை காப்பது நமது அனைவரின் கடமை.

Categories

Tech |