Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம நண்பர் படம் தானப்பா…. அதுவும் ரிலீஸ் ஆகி நல்ல போகட்டும்…. துணிவு குறித்து தளபதியின் நச் பதில்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். அதன்பிறகு நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று அடுத்த வருடம் ரிலீஸ் ஆகிறது. அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் படம் என்றாலே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிடும் நிலையில், தற்போது 2 பேரின் திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆவதால் வாரிசு மற்றும் துணிவு படங்களின் அப்டேட்டுகள் தான் தற்போது  இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் ஷாம் தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் விஜயிடம் துணிவு திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் விஜய் அந்தப் படமும் வரட்டும். நம்ம நண்பர் படம் தானே. அதுவும் நல்லா போகட்டும். இதுவும் நல்லா போகட்டும் என்று கூறினாராம். மேலும் துணிவு திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சொன்னது இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |