இந்தியாவில் மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் அவதிப்பட்டு வருவதால் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை இறக்குமதி செய்யும் முயற்சியில் சோனு சூட் இறங்கியுள்ளார்.
நடிகர் சோனு சூட் கொரோனா ஆரம்பித்த முதலே பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை சோனு சூட் செய்துவந்தார். தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையிலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அவருக்கு பல பாலிவுட் நடிகர்களும் நன்கொடை வழங்கி ஊக்குவித்து வருகின்றன. தற்போது மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்து வரும் சூழ்நிலையில் அடுத்த கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து நான்கு ஆக்சிஜனை உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது: “ஆக்சிஜன் தேவைப்படும் மக்களுக்காக ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை கொண்டு வர உள்ளோம்.
ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாவதை அதிகமாக பார்க்கிறோம். அவற்றை பெற்று மக்களுக்கு வழங்கி அவர்களின் உயிர்களை காக்க உதவிபுரிய உள்ளதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே ஆர்டர் கொடுத்து விட்டதாகவும் இன்னும் 10 மற்றும் 12 நாட்களில் அடுத்த ஆக்ஸிஜன் இயந்திரத்தை வாங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அனைத்தையும் முடிந்த வரையில் குறித்த நேரத்தில் கொண்டு வர முயற்சி செய்து வருவதாகவும், இனிமேல் ஒரு உயிர்கள் கூட இனி இழந்துவிடகூடாது என்று அவர் கூறியுள்ளார்.