டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தின் போது துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் நாடாளுமன்ற சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, நம்முடைய துணை ஜனாதிபதி ஒரு விவசாயியின் மகன். அவர் ராணுவ பள்ளியில் பயின்றுள்ளதால் ராணுவ வீரர்களுடனும், விவசாயிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.
நம்முடைய நாடு 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி, ஜி-20 மாநாட்டுக்கு தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு இந்த கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு நம் நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்துள்ளார். இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமூகத்தின் நலிவடைந்த பிரிவிலிருந்து வந்துள்ளார். தற்போது நம்முடைய துணை ஜனாதிபதி ஒரு விவசாயின் மகன். மேலும் துணை ஜனாதிபதிக்கு சட்டத்துறையிலும் நல்ல அறிவு இருக்கிறது என்று பெருமிதத்துடன் கூறினார்.