தமிழக அரசினுடைய அமைச்சர்கள் வரிசைப்படி பத்தாவது இடமானது தற்போது உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் குழு புகைப்படம் எடுக்கப்பட்டபோது அவர் அந்த இடத்தில் தான் அமர்ந்திருந்தார். வழக்கமாக இது போன்ற வரிசைகளில் யார் மூத்த அமைச்சர் ? யார் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள் ? என்று அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் வரிசைப்படி எண்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த அடிப்படையிலேயே இன்று காலையிலே புதிதாக பொறுப்பேற்றக்கூடிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 10வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு பிறகு எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில் கூட முதல் வரிசையிலே உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்தார்.
மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பின் வரிசையில் எழுந்து நின்ற நிலையில் இணையதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. அவற்றுக்கெல்லாம் விடை கொடுக்கக் கூடிய வகையில் தான் இந்த வரிசை அமைந்திருக்கிறது.