தமிழகத்தில் மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள் ஜூன் எட்டாம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசியம் இன்றி வெளியில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும் பல அரசு சார்ந்த நிறுவனங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகளும் ஜூன் எட்டாம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே 2020 டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகள் மே 8ஆம் தேதி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தேர்வுகளின் முடிவுகள் ஜூன் எட்டாம் தேதி வெளியாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.