கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பல உதவிகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றது.
இதுபோன்ற சூழ்நிலையில் கொரோனவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் குறித்து சமூக வலைதளங்களில் யாரும் பதிவிட கூடாது என்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது. கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத பட்சத்தில் காவல்துறை அல்லது மாவட்ட குழந்தை நலவாழ்வு குழுவிற்கு தகவல் அளிக்கலாம். மேலும் 1098 என்ற சைல்டு லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். சிலர் நன்கொடை வழங்க கூறுவது, தத்தெடுப்பு காண வேண்டுகோளை செய்வது சட்டத்தை மீறுவதாகும் என்று எச்சரித்துள்ளது.