Categories
தேசிய செய்திகள்

குளியலறைக்கு வெளியே இருந்த உருவம்… ஷாக்கான பெண் மருத்துவர்… குடும்பத்தினரிடம் கையும் களவுமாக சிக்கிய இளைஞர்…!!

புதுச்சேரி மாநிலம் சின்னபேட் என்ற பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு உறங்கலாம் என்று குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு நிழல் போன்ற உருவம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வெளியில் மர்மநபர் யாரோ இருப்பதை உறுதி செய்த அந்த பெண் வீட்டில் இருந்த தந்தை மற்றும் சகோதரரிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார்.

அவர்கள் மெதுவாக வெளியில் சென்று பார்த்தபோது ஒரு இளைஞன் அங்கு நின்று கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும் ஓடிய அவனை தந்தை மற்றும் மகன் இருவரும் சேர்ந்து பிடித்தனர். பின்னர் விசாரணை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது. பிடிபட்ட நபரை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Categories

Tech |