Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வெளியே பார்த்தா போன்… உள்ள திறந்து பாத்தா களிமண்”… பெண்களை வைத்து வேலை வாங்கிய பித்தலாட்ட கும்பல்..!!

வேலூரில் போலியான கால் சென்டரை நடத்தி மக்களை ஏமாற்றி வந்த பண மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்த சுப்பையா தெருவில் உள்ள ஒரு மாடி வீட்டில் இளம் பெண்கள் பலர் வந்து செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியபோது கால் சென்டர் என்ற பெயரில் 15 பெண்கள் வேலை செய்து வருவது தெரியவந்தது.

இவர்கள் பணியில் அமர்த்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் அழைத்து குறைந்த மொபைல் போன், சார்ஜர், பவர் பேங்க் போன்ற வழங்குவதாக கூறி ஆசைகாட்டி ஆன்லைனில் பணம் போட வைத்து அதற்கு பதிலாக பிளாஸ்டிக் களிமண், போன்றவற்றை அழகாக பேக் செய்து உண்மையான பொருள் போல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி ஏமாற்றியதாக தெரியவந்தது.

பலர் பணம் கட்டி ஏமாந்த நிலையில், இங்கு வேலை செய்யும் பெண்கள் குடும்ப வறுமை காரணத்தைக் கொண்டு மூளைச்சலவை செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டதும் தெரியவந்தது. பெண்களின் பெற்றோரை அழைத்து காவல் துறையினர் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் பல்வேறு போலி கால் சென்டர்களை நடத்தி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் எச்சரித்துள்ளனர். இவற்றை நடத்தும் நபர்கள் ஆண் பெண் இருவரும் அவர்கள் வறுமையைக் காரணம் காட்டி இந்த பணியில் அமர்த்துவது தெரியவந்தது. இந்த நிறுவனத்தை நடத்தி வந்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |